இட்லி மட்டுமே விற்று தொழிலதிபர் ஆனவரின் கதை - idly iniyavan success story
[idly iniyavan success story]சாதாரண ஒரு இட்லியை விற்று ஒருவர் பெரும் பணக்காரராக மாற முடியுமா? நிச்சயம் முடியும்! அதை சாதித்தவரின் கதைதான் இந்த தொகுப்பு. இதில் அவர் பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் அதையும் தாண்டி வெற்றி பெற்றிருக்கும் அவருடைய அனுபவத்தையும் அவர் கூறுவது போலவே இந்த தொகுப்பில் காண்போம். (Tamil motivational stories) . (Motivationbala.blogspot.com) என் பெயர் இனியவன். அனைவரும் என்னை இட்லி இனியவன். என்று அழைப்பார்கள். நான் கோவையில் மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்தவன் என் உடன் பிறந்தோர் மொத்தம் 10 பேர். தினமும் மூன்று வேளை உணவிற்கே கஷ்டப்படும் சூழல். நான் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். அதுவும் தினமும் பள்ளியில் கிடைக்கும் இலவச மதிய உணவிற்காக தான் நான் பள்ளிக்கு சென்றேன். சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் உணவிற்கு என்ன செய்வது?என்று தெரியாமல் எங்கள் ஊரில் பிரபலமான சாந்தி பேக்கரியில் வேலைக்கு சேர்ந்தேன். எனக்கு சம்பளம் ஒரு ரூபாய் 20 காசுகள் மட்டுமே. அதுபோக இரண்டு வேளையும் உணவு கிடைக்கும். கோவையில் பன் பட்டர் ஜாம் மிகவும் பிரபலமான ஒன்...