யார் இந்த பீலா ராஜேஷ்? Who is beela Rajesh?

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் எவ்வளவு வேகமாக பரவுகிறதோ... அதே அளவிற்கு பீலா ராஜேஷ் என்ற பெயரும் தமிழ்நாட்டில் வேகமாக பரவிவருகிறது....(Tamil motivational stories)
( motivationbala.blogspot.com )

யார் இந்த பீலா ராஜேஷ்?  தற்போது சுகாதார துறை செயலாளராக துணிச்சலுடன்  செயலாற்றும் இவர் மிகப் பெரிய போராட்டங்களுக்கு பிறகு இந்த இடத்திற்கு வந்துள்ளார்... அது பற்றின தொகுப்பினை தற்போது விரிவாக பார்ப்போம்...

பீலா ராஜேஷ் 1969ல் சென்னை கொட்டிவாக்கத்தில் பிறந்தார்.. இவரது தந்தை எல்.என். வெங்கடேஷன் தமிழக காவல் துறையில் DGP  ஆக பணியாற்றினார்.  இவரது தாய் சாத்தான்குளம் தொகுதியில் ex. MLA வாக இருந்தார். தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷன் குடும்பத்தார் பெரிய அளவில் சவுக்கு வியாபாரம் செய்து வருகிறார்கள். இப்படி அரசியல் மற்றும் காவல்துறை குடும்பத்தை சேர்ந்த பீலா சிறிய வயது முதலே படிப்பு மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலுமே எப்போதும் முதல் இடத்தில் இருந்து வந்தார்.  (Tamil motivational stories)இவர் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் MBBS படித்து பட்டம் பெற்றவர்... சிறு வயது முதலே அனைத்தையும் நன்றாக யோசித்து சுயமாக முடிவு எடுக்கும் தன்மை கொண்டவர் பீலா.. அவர் எடுக்கும் முடிவுக்கு என்றுமே அவரது குடும்பம் தடையாக இருந்தது இல்லை. அதுப்போல் தான் ராஜேஷ் தாஸ் என்பவரை 1992ல் காதல் திருமணம் செய்து கொண்டார்.. இவருடைய கணவர் ராஜஷ் ஒரு நேர்மையான IPS அதிகாரி. தன் கனவரைப் போல் தானும் ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக இருக்க வேண்டும் என்று எண்ணிய பீலா UPSC பரீட்சை எழுதி 1997 ல் IAS அதிகாரியாக தேர்வானார்.  IAS ஆக தன்னுடைய பணியை பீஹாரில் தொடங்கியுள்ளார். மிகவும் நேர்மையான அரசு அதிகாரியாக யாருக்கும் அஞ்சாமல் துனிச்சலுடன் தன் பணியை சிறப்பாக செய்து வந்தார். தன் கனவர் தமிழகத்தில் IPS அதிகாரியாக பணியாற்றி வந்ததால் பணி மாறுதல் பெற்று தமிழகம் வந்தார். பின்பு 2003 ல் திரும்பவும் ஜார்கண்ட் யில் பணி மாற்றம் கிடைத்தது. அங்கே மத்திய அரசின் ஹோமியோபதி மருத்துவம், மத்திய ஜவுளி துறை அதிகாரி போன்ற உயரிய பதவிகளில் இருந்துள்ளார். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தன்னுடைய சொந்த மாநிலத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இவருக்கு எப்பொழுதும் உண்டு.. ஆகையால் மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு தமிழகத்திற்கு திரும்பவும் IAS அதிகாரியாக பணி மாறுதல் பெற்றார். தமிழ்நாட்டிலும் நகர்மன்ற இயக்குனர், செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன்வளத்துறை இயக்குநர் போன்ற பல பதவிகளில் இருந்துள்ளார்.. இவர் IAS அதிகாரியாக இருந்த போதிலும் அடிப்படையில் இவர் ஒரு டாக்டர் என்பதால் 2019 ல் தமிழ்நாட்டின் சுகாதார துறை செயலாளராக இருந்த டாக்டர்  ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக பீலா ராஜேஷ் இந்த பதவிக்கு பொறுப்பேற்றார். தற்போது கொரொனா பற்றிய தினசரி செய்திகளையும், தகவல்களையும் பத்திரிகை மூலமாக  மக்களுக்கு பகிர்ந்து நம்பிக்கையூட்டி வருகிறார் இவரது பணி மேலும் சிறக்க நம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்.

Comments

Post a Comment

Kindly support our blog

Popular posts from this blog

கோபி சுதாகர் வெற்றிக்கு பின்னால்? Struggles behind the success of Parithabangal Gopi and Sudhakar

இட்லி மட்டுமே விற்று தொழிலதிபர் ஆனவரின் கதை - idly iniyavan success story