கோபி சுதாகர் வெற்றிக்கு பின்னால்? Struggles behind the success of Parithabangal Gopi and Sudhakar

youtube-சேனல் மூலமாக சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை மிகவும் நகைச்சுவையாக அனைவரும் ரசிக்கும்படி மக்களிடம் கூறுபவர்கள் கோபி மற்றும் சுதாகர். தற்போது  இணையத்தில் பிரபலமாக இருக்கும் இவர்கள் இந்த இடத்திற்கு அவ்வளவு சுலபமாக வரவில்லை. பல போராட்டங்களை கடந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கடந்து வந்த பாதையை தற்போது பார்ப்போம். (Tamil motivational stories) (motivationbala.blogspot.com)
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருவரும் ஆண்டு விழாக்களில் பங்கு பெற்று தங்களுடைய இயல்பான நடிப்பை மேடையில் வெளிக்கொண்டு வந்தனர். நடிப்பில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருவரும் படிப்பை முடித்த உடன் சென்னைக்கு வந்தனர். அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களிலும் வாய்ப்பு தேடி அலைந்து கலைத்தனர். அவ்வளவு சுலபமாக வாய்ப்புகள் கிடைத்து விடுமா என்ன ? ஏமாற்றங்களே மிஞ்சின. அப்போது அவர்களுடைய நண்பர் இருவருக்கும் YouTube பற்றி கூறினார். இனி வரும் காலங்கள் digital யுகமே.. ஆகையால் உங்களுடைய திறமையை இதிலே காட்டுங்கள் என்றார். ஆனால் YouTube-ன் அடிப்படையே தெரியாத இருவரும் அது பற்றி அறிந்துக் கொள்ள முயற்சி செய்தனர். அந்த சமயம் ஒரு நிறுவனத்தில் வேலைக்காக இருவரும் விண்ணப்பித்தனர். அந்த நேர்முகத்தேர்வில் இருவருக்கும் தோல்வி மட்டுமே கிடைத்தது. அதன்பின் moontv என்ற நிறுவனத்தில் இருவருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு தான் இருவருக்கும் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. தங்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையே நகைச்சுவை யாக மக்கள் ரசிக்கும் படி நடித்து காட்டினர்.  அது மட்டும் இன்றி சமூக அவலங்களையும், அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் தங்கள் பாணியில் தோலுரித்து காட்டினர்.


அதன் பின்னர் Madras central என்ற channel-ல் தங்களுடைய நடிப்பு திறன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகினர். இதுவரை இவர்கள் வீடியோவிற்க்கு என பெரிய அளவில் செலவு செய்தது கிடையாது... அதிகபட்சம் ஒரு வீடியோவிற்க்கு 500 ரூபாய் வரை மட்டுமே செலவு செய்துள்ளனர். மிகவும் சிக்கனமாக தாங்கள் எடுக்கும் content களை மட்டுமே நம்பி வீடியோ தயார் செய்கின்றனர். இவர்களின் ஒவ்வொரு வீடியோ வும் இருவரின் மனதிற்கும் பிடித்து இருந்தால் மட்டுமே வெளிவரும். இப்படியாக 200 வீடியோக்கள் நடித்து கிட்டதட்ட 15 லட்சம் subscribers களை சம்பாதித்து உள்ளனர். Zombie, uriyadi-2 போன்ற படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து உள்ளனர்.  தற்போது Crowd funding மூலமாக ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து வெள்ளித் திரையில் ஒரு படத்தை தயாரித்து நடித்து வருகின்றனர். மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து வெள்ளித்திரை வரை முன்னேறிய இவர்கள் கடந்து வந்த பாதையில் ஆயிரம் அவமானங்களும், தோல்விகளுமே. இருப்பினும் விடா முயற்சி மூலம் இந்த வெற்றியை பெற்ற இவர்களை நாமும் வாழ்த்துவோம்..

"நன்றி"

Comments

Post a Comment

Kindly support our blog

Popular posts from this blog

யார் இந்த பீலா ராஜேஷ்? Who is beela Rajesh?

இட்லி மட்டுமே விற்று தொழிலதிபர் ஆனவரின் கதை - idly iniyavan success story