Posts

Showing posts from 2020

ஆப்பிரிக்க மக்களின் மனதை கவர்ந்த மதுரை இளைஞர் - A story of Kannan ambalam

Image
மதுரை அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர்.ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் நீர் மேலாண்மையில் அசத்திக் கொண்டிருக்கிறார். எத்தியோப்பியாவில் காடுகள் மலைகளுக்கு நடுவே உள்ளடங்கி கிடக்கும் கிராமங்களின் முகத்தையே மாற்றிக் கொண்டு இருக்கும் அவர். தமிழர்களின் பெருமையை அந்த ஆப்பிரிக்க நாட்டில் நிலைநாட்டி வருகிறார். (a story of kannan ambalam) click to find new ;  Tamil motivational stories     (motivationbala.blogspot.com) மதுரை அலங்காநல்லூர் பொந்துகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் அம்பலம். I.A.S கனவில் இருந்தவருக்கு அந்த கனவு கைகூடவில்லை. படித்த படிப்புக்கு எத்தியோப்பியாவில் பேராசிரியர் பணி கிடைத்தது. 2009 ஆம் ஆண்டு அங்கு சென்ற அவருக்கு அந்த நாட்டின் நிலை துயரத்தைத் தந்தது. இதனால் அதனை மாற்ற தன்னாலான முயற்சிகளை கண்ணன் செய்யத் தொடங்கினர். நான் IAS ஆக  விரும்பியது மக்கள் பணி செய்வதற்கு தான். ஆட்சியர் ஆக முடியாமல் போனதற்காக நோக்கத்தை கைவிட முடியுமா? ஆட்சியராக இருந்தால் என்னவெல்லாம் செய்து இருப்பேனோ அதனை எல்லாம் செய்ய விரும்பினேன். அதனை எத்தியோப்பியாவின் உள்ளூர் மக்களைக் க

Sales Girl to Central Minister - சேல்ஸ் கேர்ள் டூ சென்ட்ரல் மினிஸ்டர்(A successful story about Nirmala sitharaman)

Image
நேர்த்தியான உடை, கம்பீரமான நடை தடங்கள், இல்லா பேச்சு. என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கலக்கியவர் நிர்மலா சீதாராமன் (Nirmala sitharaman) . மோடி தலைமையிலான கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இனை அமைச்சராகவும் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. (motivationbala.blogspot.com) (Tamil motivational stories) லண்டன் தெருக்களில் சேல்ஸ் கேள் ஆக வேலைப் பார்த்த நிர்மலா. இந்தியாவின் இரண்டாவது பெண் பாதுகாப்பு துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றதற்கு பின்னால் அவரது உழைப்பும் விடா முயற்சியுமே உள்ளது. ஆங்கிலம், தமிழ், இந்தி என மும்மொழிகளிலும் ஆளுமை நிறைந்த நிர்மலா சீதாராமன். 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதினெட்டாம் நாள் மதுரையில் நாராயணன் சீதாராமன் சாவித்திரி தம்பதிக்கு மகளாக பிறந்தார். திருச்சி முசிறியை பூர்வீகமாக கொண்ட நாராயணன் இந்திய ரயில்வே துறையில் பணிபுரிந்து வந்ததன் காரணமாக அடிக்கடி இடமாறுதல் பெற்றார். நிர்மலாவின் குழந்தைப்பருவம் இடம் மாறுதல் காரணமாக

இட்லி மட்டுமே விற்று தொழிலதிபர் ஆனவரின் கதை - idly iniyavan success story

Image
[idly iniyavan success story]சாதாரண ஒரு இட்லியை விற்று ஒருவர் பெரும் பணக்காரராக மாற முடியுமா? நிச்சயம் முடியும்! அதை சாதித்தவரின் கதைதான் இந்த தொகுப்பு. இதில் அவர் பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் அதையும் தாண்டி வெற்றி பெற்றிருக்கும் அவருடைய அனுபவத்தையும் அவர் கூறுவது போலவே இந்த தொகுப்பில் காண்போம்.  (Tamil motivational stories) . (Motivationbala.blogspot.com) என் பெயர் இனியவன். அனைவரும் என்னை இட்லி இனியவன். என்று அழைப்பார்கள். நான் கோவையில் மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்தவன் என் உடன் பிறந்தோர் மொத்தம் 10 பேர். தினமும் மூன்று வேளை உணவிற்கே கஷ்டப்படும் சூழல். நான் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். அதுவும் தினமும் பள்ளியில் கிடைக்கும் இலவச மதிய உணவிற்காக தான் நான் பள்ளிக்கு சென்றேன். சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் உணவிற்கு என்ன செய்வது?என்று தெரியாமல் எங்கள் ஊரில் பிரபலமான சாந்தி பேக்கரியில் வேலைக்கு சேர்ந்தேன். எனக்கு சம்பளம் ஒரு ரூபாய் 20 காசுகள் மட்டுமே. அதுபோக இரண்டு வேளையும் உணவு கிடைக்கும். கோவையில் பன் பட்டர் ஜாம் மிகவும் பிரபலமான ஒன்று.

கோபி சுதாகர் வெற்றிக்கு பின்னால்? Struggles behind the success of Parithabangal Gopi and Sudhakar

Image
youtube- சேனல் மூலமாக சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை மிகவும் நகைச்சுவையாக அனைவரும் ரசிக்கும்படி மக்களிடம் கூறுபவர்கள் கோபி மற்றும் சுதாகர். தற்போது  இணையத்தில் பிரபலமாக இருக்கும் இவர்கள் இந்த இடத்திற்கு அவ்வளவு சுலபமாக வரவில்லை. பல போராட்டங்களை கடந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கடந்து வந்த பாதையை தற்போது பார்ப்போம். (Tamil motivational stories) (motivationbala.blogspot.com) கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருவரும் ஆண்டு விழாக்களில் பங்கு பெற்று தங்களுடைய இயல்பான நடிப்பை மேடையில் வெளிக்கொண்டு வந்தனர். நடிப்பில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருவரும் படிப்பை முடித்த உடன் சென்னைக்கு வந்தனர். அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களிலும் வாய்ப்பு தேடி அலைந்து கலைத்தனர். அவ்வளவு சுலபமாக வாய்ப்புகள் கிடைத்து விடுமா என்ன ? ஏமாற்றங்களே மிஞ்சின. அப்போது அவர்களுடைய நண்பர் இருவருக்கும் YouTube பற்றி கூறினார். இனி வரும் காலங்கள் digital யுகமே.. ஆகையால் உங்களுடைய திறமையை இதிலே காட்டுங்கள் என்றார். ஆனால் YouTube-ன் அடிப்படையே தெரியாத இருவரும் அது பற்றி அறிந்துக் கொள்ள முயற்சி செய்தனர். அந்

யார் இந்த பீலா ராஜேஷ்? Who is beela Rajesh?

Image
கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் எவ்வளவு வேகமாக பரவுகிறதோ... அதே அளவிற்கு பீலா ராஜேஷ் என்ற பெயரும் தமிழ்நாட்டில் வேகமாக பரவிவருகிறது....(Tamil motivational stories) ( motivationbala.blogspot.com ) யார் இந்த பீலா ராஜேஷ்?  தற்போது சுகாதார துறை செயலாளராக துணிச்சலுடன்  செயலாற்றும் இவர் மிகப் பெரிய போராட்டங்களுக்கு பிறகு இந்த இடத்திற்கு வந்துள்ளார்... அது பற்றின தொகுப்பினை தற்போது விரிவாக பார்ப்போம்... பீலா ராஜேஷ் 1969ல் சென்னை கொட்டிவாக்கத்தில் பிறந்தார்.. இவரது தந்தை எல்.என். வெங்கடேஷன் தமிழக காவல் துறையில் DGP  ஆக பணியாற்றினார்.  இவரது தாய் சாத்தான்குளம் தொகுதியில் ex. MLA வாக இருந்தார். தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷன் குடும்பத்தார் பெரிய அளவில் சவுக்கு வியாபாரம் செய்து வருகிறார்கள். இப்படி அரசியல் மற்றும் காவல்துறை குடும்பத்தை சேர்ந்த பீலா சிறிய வயது முதலே படிப்பு மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலுமே எப்போதும் முதல் இடத்தில் இருந்து வந்தார்.  (Tamil motivational stories)இவர் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் MBBS படித்து பட்டம் பெற்றவர்... சிறு வயது முதலே அனைத்தையும் நன்றாக