Sales Girl to Central Minister - சேல்ஸ் கேர்ள் டூ சென்ட்ரல் மினிஸ்டர்(A successful story about Nirmala sitharaman)


நேர்த்தியான உடை, கம்பீரமான நடை தடங்கள், இல்லா பேச்சு. என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கலக்கியவர் நிர்மலா சீதாராமன்(Nirmala sitharaman). மோடி தலைமையிலான கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இனை அமைச்சராகவும் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.(motivationbala.blogspot.com) (Tamil motivational stories)

லண்டன் தெருக்களில் சேல்ஸ் கேள் ஆக வேலைப் பார்த்த நிர்மலா. இந்தியாவின் இரண்டாவது பெண் பாதுகாப்பு துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றதற்கு பின்னால் அவரது உழைப்பும் விடா முயற்சியுமே உள்ளது. ஆங்கிலம், தமிழ், இந்தி என மும்மொழிகளிலும் ஆளுமை நிறைந்த நிர்மலா சீதாராமன். 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதினெட்டாம் நாள் மதுரையில் நாராயணன் சீதாராமன் சாவித்திரி தம்பதிக்கு மகளாக பிறந்தார். திருச்சி முசிறியை பூர்வீகமாக கொண்ட நாராயணன் இந்திய ரயில்வே துறையில் பணிபுரிந்து வந்ததன் காரணமாக அடிக்கடி இடமாறுதல் பெற்றார். நிர்மலாவின் குழந்தைப்பருவம் இடம் மாறுதல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கழிந்தது. திருச்சியில் உள்ள சீதாலட்சுமி ராமசாமி கல்வி நிறுவனத்தில் பள்ளிப் படிப்பையும் இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற நிர்மலா. தனது  21வது வயதில் மேற்படிப்பிற்காக வயதில் மேற்படிப்பிற்காக தில்லி சென்றார். இந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்று வர்ணிக்கப்படும் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பொருளாதாரம் படித்து முடித்தார். அவருடைய அரசியல் பயணம் அங்கு தான் துவங்கியது. வலதுசாரி,இடதுசாரி சிந்தனைகள் கடுமையாக விவாதிக்கப்படும் நேரு பல்கலைக்கழகத்தில் வலது மற்றும் இடது என இரண்டையும் விமர்சிக்கும் FREE THINKERS என்ற மாணவர் அமைப்பில் இணைந்து செயல்பட்டார். பல்கலைக்கழகத்தில் சேர்ந்த புதிதில் இந்தி மொழி தெரியாததால் மிகவும் சிரமப்பட்டார். அதை தடையாக கருதாமல் வெகுவிரைவிலேயே இந்தி மொழியைக் கற்றுத் தேர்ந்தார். மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கண்டித்து துணைவேந்தருக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் அளவிற்கு துணிச்சலாக செயல்பட்டார்.

தெலுங்கு பிராமண குடும்பத்தில் இருந்து JNU வில் படித்துக் கொண்டிருந்த பரகாலாபிரபாகரன் என்பவருக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு தன் 27ஆவது வயதில் குடும்பத்தோடு லண்டன் சென்றார் நிர்மலா சீதாராமன். லண்டனில் வீட்டு அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் SALES GIRL ஆக பணியாற்றினார். இந்தோ-ஐரோப்பிய வர்த்தகம் தொடர்பாக காட் ஒப்பந்தத்திற்கு உட்பட்ட அளவில் ஒரு ஆய்வை செய்து அதில் டாக்டர் பட்டம் வென்றார். இனிமையாக நடந்து கொண்டிருந்த மணவாழ்க்கையில் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை வளர்ப்பிற்கான கணவனோடு தன்  32-வது வயதில்  இந்தியா திரும்பினார் நிர்மலா சீதாராமன். இந்தியா திரும்பிய நிர்மலா சீதாராமன் சமூகப்பணிகள் மூலமாக பெண்ணுரிமை போராட்டங்கள் மூலமாக வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தார். தன்  47வது வயதில் 2006 ஆம் ஆண்டு பாஜகவில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார் நிர்மலா சீதாராமன். அவரது கணவர் பிரபாகரன், சிரஞ்சீவி ஆரம்பித்திருந்த பிரஜா ராஜ்யம் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து நிர்மலா சீதாராமன் பா.ஜா.கா வில் இணைந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பாஜகவில் இணைந்த நிர்மலா சீதாராமன் தன் அசாதாரண உழைப்பாலும்.... துடிப்பு மிக்க செயல்களாலும் 4 ஆண்டுகளில் தன்னுடைய 51வது வயதில் பாஜகவின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக உயர்ந்தார். 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடியை முன்னிறுத்தி பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கட்சிக்காக அயராது உழைத்த நிர்மலாவின் மீது பிரதமர் மோடியின் கவனம் திரும்பியது. அவரது திறமைக்கும் உழைப்புக்கும் பரிசாக வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சராக பொறுப்புகளை வழங்கினார். அதே ஆண்டில் ஆந்திராவில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவையில் தன்னுடைய பங்களிப்பை பெரிதும் காட்டினார். மீண்டும் அவரது திறமைக்கு பரிசு கிடைத்தது. இந்த முறை இணை அமைச்சர் பதவி அல்ல இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் இந்திராகாந்தி வகித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி இந்த முறை அவரது திறமைக்கு பரிசாக வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் நாள் இந்தியாவின் இரண்டாவது பெண் பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். நீண்ட காலத்திற்குப் பிறகு பெண் ஒருவருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி வழங்கியதற்காக பாஜகவையும் மோடியையும் பத்திரிக்கையாளர்கள் முதல் பலரும் பாராட்டினர். பாதுகாப்பு அமைச்சர் பதவியைப் பெற்ற நிர்மலா சீதாராமனுக்கு பல்வேறு சவால்கள் காத்திருந்தது. பாஜகவின் முன்னாள் தலைவர்கள் பலரும் பாதுகாப்பு துறைக்கு ரஃபேல் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக மோடி அரசின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது பற்றி பல்வேறு கட்டுரைகளை இந்து நாளிதழ் வெளியிட்டது. கிடைத்த வாய்ப்பை தவற விடாமல் காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சனையை வைத்து நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடுமையான விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்தார். பிரதமரை திருடன் என்று சொன்னார். காகிதத்தில் கூட விமானம் செய்திராத அனில் அம்பானிக்கு பிரதமர் மோடி அரசில் ஒப்பந்தத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறார். என்று காரசாரமாக பேசினார் ராகுல் காந்தி. ராகுல்காந்தியின் வாதத்தால் ஆளும் கட்சிகள் ஆடிப் போய் இருக்க அதை லாவகமாக கையாண்டு முடித்து வைத்தார் நிர்மலா சீதாராமன். ரபேல் தொடர்பாக அவர் எழுப்பிய பதில் கேள்விகள் பாஜகவின் மத்தியில் வரவேற்பை பெற்றது.  அதே வேளையில் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. மத்திய அமைச்சராக இருந்தாலும் சொந்த ஊருக்கு வரும் போது அவரது தாயோடு சேர்ந்து ஊறுகாய் செய்யும் அவரது எளிமை கட்சிகளையும் தாண்டி இன்று வரை பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. தற்போது நிதி அமைச்சராக பதவி வகித்து வரும் நிர்மலா சீதாராமன் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி நிவாரணத்திற்காக பட்ஜெட்டை வாசித்து தொழில் முனைவோருக்கான பல்வேறு பொருளாதார கடன் உதவிகளை அறிவித்தார்.
Thank you.... .

Comments

Popular posts from this blog

யார் இந்த பீலா ராஜேஷ்? Who is beela Rajesh?

கோபி சுதாகர் வெற்றிக்கு பின்னால்? Struggles behind the success of Parithabangal Gopi and Sudhakar

இட்லி மட்டுமே விற்று தொழிலதிபர் ஆனவரின் கதை - idly iniyavan success story