ஆப்பிரிக்க மக்களின் மனதை கவர்ந்த மதுரை இளைஞர் - A story of Kannan ambalam


மதுரை அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர்.ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் நீர் மேலாண்மையில் அசத்திக் கொண்டிருக்கிறார். எத்தியோப்பியாவில் காடுகள் மலைகளுக்கு நடுவே உள்ளடங்கி கிடக்கும் கிராமங்களின் முகத்தையே மாற்றிக் கொண்டு இருக்கும் அவர். தமிழர்களின் பெருமையை அந்த ஆப்பிரிக்க நாட்டில் நிலைநாட்டி வருகிறார். (a story of kannan ambalam) click to find new ; Tamil motivational stories   (motivationbala.blogspot.com)


மதுரை அலங்காநல்லூர் பொந்துகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் அம்பலம். I.A.S கனவில் இருந்தவருக்கு அந்த கனவு கைகூடவில்லை. படித்த படிப்புக்கு எத்தியோப்பியாவில் பேராசிரியர் பணி கிடைத்தது. 2009 ஆம் ஆண்டு அங்கு சென்ற அவருக்கு அந்த நாட்டின் நிலை துயரத்தைத் தந்தது. இதனால் அதனை மாற்ற தன்னாலான முயற்சிகளை கண்ணன் செய்யத் தொடங்கினர். நான் IAS ஆக  விரும்பியது மக்கள் பணி செய்வதற்கு தான். ஆட்சியர் ஆக முடியாமல் போனதற்காக நோக்கத்தை கைவிட முடியுமா? ஆட்சியராக இருந்தால் என்னவெல்லாம் செய்து இருப்பேனோ அதனை எல்லாம் செய்ய விரும்பினேன். அதனை எத்தியோப்பியாவின் உள்ளூர் மக்களைக் கொண்டு செய்தேன், என கூறும் கண்ணன் அம்பலம். மதுரை தியாகராயர் கல்லூரியில் இளங்கலைப் வேதியியலும்,  மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் முதுகலை படிப்பும் பொது நிர்வாகத்தில் M.Phil மற்றும் Phd. முடித்திருக்கிறார். எத்தியோப்பியாவின் ஒலேகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்காக அந்த நாட்டுக்கு சென்ற அவருக்கு பல்கலைக்கழக வளாகம் அருகே பார்த்த காட்சிதான் எத்தியோப்பியாவின் கிராமங்களில் உள் கட்டமைப்பை மாற்ற காரணமாக இருந்திருக்கிறது. ஒருநாள் பணிக்கு செல்லும்போது செவக்கா கிராமத்தில் ஒரு வயதான அம்மா ஆற்றை கடக்க சிரமப்படுவதை பார்த்தேன். பின் மாணவர்களிடம் இது குறித்து பேசினேன். அப்போது அவர்கள் இது போன்று பல இடங்களில் இருப்பதாகவும் ஆற்றை கடக்கும் போது மரணங்கள் நிகழ்வதாகவும் கூறினார்கள். குறுகளாக செல்லும் ஆறு தானே. நாமே மரங்களைக் கொண்டு பாலம் அமைத்தால் என்ன? என்று முடிவு செய்தேன். மாணவர்களும் உள்ளூர் மக்களுக்கு உதவினார்கள். அவர்களின் உதவியுடன் முதலில் பாலத்தை அமைத்தேன். ஆனால் அந்த பாலம் அமைத்த பிறகுதான் அதில் வேறு பிரச்சினைகள் இருப்பது புரிந்தது என கண்ணன் தெரிவிக்கிறார்.

எத்தியோப்பியா கிராமங்களில் போக்குவரத்துக்கு பிரதானமாக இருப்பது கழுதைகள் தான். இந்த மர பாலத்தை கழுதைகள் கடக்கும் போது அதன் கால்கள் மரக்கட்டைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு இடறி விழுந்துள்ளன. அதன்பின் அந்த மர பாலத்தை சிமெண்ட் பாலமாக கண்ணன் மேம்படுத்தியுள்ளார். அதன் பின் எத்தியோப்பியாவில் பல கிராமங்களில் இது போன்ற சிறு பாலங்களை அவர் அமைத்துள்ளார். பாலங்கள் மட்டுமல்ல பல இடங்களில் குடிநீர் வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். நான் இருக்கும் பகுதி மலைகள் சூழ்ந்த பகுதி இங்கு ஏராளமான நீரூற்றுகள் உள்ளன. மக்கள் அந்தத் தண்ணீரை அப்படியே குடிக்க பயன்படுத்தி வந்தார்கள். அந்த தண்ணீர் அவ்வளவு தூய்மையாக இருக்காது. சிறு சிறு கட்டமைப்புகள் மூலம் தண்ணீரை வடிகட்ட வசதி ஏற்படுத்தி அதனை குடிப்பதற்கு ஏதுவாக மாற்றினோம். எனக்கூறும் கண்ணன்.  இந்த பணிகளுக்காக பெரும்பாலும் தனது ஊழியத்தை செலவிடுகிறார்.

ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த அதிகப் பட்சம் நூறு டாலர்கள் வரை செலவாகும். இதனை பெரும்பாலும் என் சம்பள பணத்தில் இருந்தே செலவிடுவேன். சில சமயம் நண்பர்கள் தறுவார்கள். பணத்தைவிட பிரதானம் உடல் உழைப்பு தான் அதனை உள்ளூர் மக்கள் தருtamil motivational storiesவார்கள். அவர்களால் தான் இவை சாத்தியமாகின்றன.  உள்ளூர் மக்களை ஈடுபடுத்தாமல் நான் எந்த பணியையும் செய்வதில்லை. மக்களை ஈடுபடுத்தாமல் ஒரு பாலத்தையோ, அல்லது குடிநீர் கட்டமைப்பையோ உருவாக்கினால். அவர்களுக்கு அதன் மீது உரிமை வராது. யாரோ கட்டியது தானே என்ற மனப்பான்மை இருக்கும். அதனை பாதுகாக்க மாட்டார்கள். அதனால்தான் அவர்களைக் கொண்டே ஒரு செயலுக்கு வடிவம் தருகிறேன் என்று கூறும் கண்ணனுக்கு இப்படியான பணிகள் மீது ஆர்வம் வர எங்கிருந்தோ வந்து தனது சொந்த காசை செலவு செய்து நம் தாகத்தைத் தீர்த்த பென்னிகுவிக் கே காரணம் எனத் தெரிவிக்கிறார். படித்த படிப்பு மக்களுக்கு பயன்பட தானே. எனக்கு ஒரு விஷயத்தில் கொஞ்சம் அறிவு இருக்கிறது. அந்த அறிவு சிலருக்கு தேவைப்படுகிறது. அப்போது நாம் அதனை பகிர வேண்டும் அல்லவா? அதைத்தான் நான் செய்தேன். இதனை தன்னடக்கமாக எல்லாம் நான் சொல்லவில்லை. உண்மையில் தனி நபராக நான் எதையும் செய்து விடவில்லை. என் மாணவர்கள் உள்ளூர் மக்கள் என நாங்கள் ஒரு குழுவாக செய்கிறோம். அந்த குழுவை இணைக்கும் பாலம் மட்டுமே  நான்.  எதியோப்பியாவில் ஏராளமான அரசியல் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் இந்த மக்கள் எல்லாம் அவ்வளவு பாசமானவர்கள். அவர்களுக்கு நாம் உதவுகிறோம் என்று தெரிந்தால் அவர்கள் நமக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பார்கள். அவர்கள் அன்பினால்தான் இவை அனைத்தும் சாத்தியமானது. இதுவரை 43 சிறு பாலங்கள் 28 நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் ஒரு சிறு அனை ஒரு சிறு கழிப்பிடம் ஆகியவற்றை கட்டி இருப்பதாக கூறுகிறார் கண்ணன் அம்பலம். அவர் மக்கள் பணி மேலும் சிறக்க நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
   "நன்றி"

Comments

Popular posts from this blog

யார் இந்த பீலா ராஜேஷ்? Who is beela Rajesh?

கோபி சுதாகர் வெற்றிக்கு பின்னால்? Struggles behind the success of Parithabangal Gopi and Sudhakar

இட்லி மட்டுமே விற்று தொழிலதிபர் ஆனவரின் கதை - idly iniyavan success story